

தீவிரவாதத்தின் உறைவிடமாக மாறிவிட்டதால், பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா வலி யுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பரஜ்பார் நகரில் தீவிரவாத ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மராத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று நடத்தப் பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா பங்கேற்று வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தீவிரவாதத்தின் உறைவிடமாக பாகிஸ்தான் மாறிவிட்டது. எனவே பாகிஸ்தானை தீவிரவாத நாடாக ஐ.நா பிரகடனப்படுத்த வேண்டும். இதற்காக அனைத்து நாடுகளும் ஐ.நாவுக்கு நெருக்குதல் தர வேண்டும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக மாறிவருவதாக சமீபத்தில் விமர்சித் திருந்தார். அவரது கருத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதான்கோட் தாக்குதல் சம்பவம் இந்தியாவுக்கு எதிரான தேச துரோக செயலாகும். இதன் மூலம் நமது முதுகில் பாகிஸ்தான் குத்திவிட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான கொள்கைகளை உருவாக்க கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும் வகையில் தீவிர வாத தடுப்பு கமிஷன் அமைக்க வேண்டும்.
தீவிரவாதம் தொடர்பான கொள் கையை திருத்திக் கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு பல முறை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை அந்நாடு திருந்தவில்லை.
சமூக ஊடகங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தங்களது தீய வலையில் சிக்க வைக்க ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முயற் சித்து வருகிறது. முஸ்லிம் தலைவர்களும், இமாம்களும் இத் தகைய தீவிரவாத நடவடிக்கை களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்ப வேண்டும். அப்போது தான் தீவிரவாதத்தின் பிடியில் நாடு சிக்காமல் இருக்கும்.
எல்லையில் நமது வீரர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். எனினும் உள்நாட்டில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ் இ- இதேஹாதுல் முஸ்லீமன் அமைப்பின் தலைவ ரான அசாதுதீன் ஒவாசி போன் றோர் தேசத்துக்கு எதிராக நடந்து கொள்கின்றனர். அவரது கொள்கை தேசத்துக்கு விரோத மாக உள்ளது. எனவே அவரது அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.