Published : 04 Aug 2021 04:02 PM
Last Updated : 04 Aug 2021 04:02 PM

கர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; எடியூரப்பாவின் மகனுக்கு இடமில்லை

பெங்களூரு

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மையை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதுபோலவே யாரும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை.

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து எடியூரப்பா அமைச்சரவையில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மையின் பெயரை முதல்வராக முன்மொழிந்தனர்.

இதை பெரும்பான்மை எம்எல்ஏக்களும் மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கா்நாடகத்தில் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக டெல்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்தினார்.

அமைச்சரவையில் ஜாதி, மாவட்ட வாரியாக முக்கியத்துவம் அளித்து அமைச்சா் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக் கொண்டது.

அமைச்சரவையில் அனுபவம் மற்றும் புதிய வலிமை இரண்டின் கலவையாக இருக்கும், "என்று அவர் கூறினார், அமைச்சரவையில் லிங்காயத்துகள் 8 பேர், ஒக்கலிகர்கள் 7 பேர், ஓபிசி 7 பேர், எஸ்.சி. 3 பேர் எஸ்.டி. பிரிவினர் ஒருவர் ரெட்டி ஒருவர் பெண் ஒருவர் என மொத்தம் 27 பேர் பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

எனினும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதுபோலவே யாரும் துணை முதல்வர் பதவியும் வழங்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x