

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய 10 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.
கடல்மட்டத்திலிருந்து 19,600 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் வடக்கு பனி முகட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பனிச்சரிவு அங்கிருந்த ராணுவ முகாமை மூடியது. இங்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.
ராணுவ முகாம் மீது விழுந்த அதிகப்படியான பனி, அதனை மிக ஆழத்தில் புதைத்துவிட்டது என பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“அவற்றை அப்புறப்படுத்து வது மிகக்கடினமான பணியாக இருக்கிறது. நேற்றைய முயற்சி களால், அதிக அளவிலான மீட்புக் குழுவினர், புதைந்த முகாமைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். நிபுணர் குழு, போதுமான கருவிகளுடன் மீட்புப் பணி தொடர்கிறது” என்றார்.
இந்நிலையில் 10 வீரர்களும் மரணமடைந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. தகவலறிந்த பிரதமர் மோடி, “நாட்டுக்காக வீரர் கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.