

வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம், நமது ஆடவர் ஹாக்கி அணியினர் டோக்கியோ 2020 போட்டியில் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்தினார்கள் அதுதான் முக்கியமானது என்றும், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அடுத்து வரவிருக்கும் போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
“வெற்றிகளும், தோல்விகளும் வாழ்வின் ஓர் அங்கம். டோக்கியோ 2020 போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், அதுதான் முக்கியம். வரவிருக்கும் அடுத்த போட்டிக்கும், குழுவினரின் எதிர்கால முயற்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நம் வீரர்களால் இந்தியா பெருமை அடைகிறது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.