சாலை விபத்து 18% சரிவு; உயிரிழப்பும் குறைகிறது: நிதின் கட்கரி தகவல்

சாலை விபத்து 18% சரிவு; உயிரிழப்பும் குறைகிறது: நிதின் கட்கரி தகவல்
Updated on
1 min read

மோட்டார் வாகன சட்ட திருத்தச் சட்டம் சாலை பாதுகாப்பை மேம்படுத்தி உயிரிழப்பை குறைத்துள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவில் உள்ள தகவல்படி, கடந்த 2018ம் ஆண்டில் 4,67,044 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2019ம் ஆண்டில் 4,49,002 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2020ம் ஆண்டில் 3,66,138(தற்காலிகம்) விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சதவீதத்தில் இது 18.46 சதவீதமாகும்.

மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், சாலை பாதுகாப்பு சூழலை மேம்படுத்தி உயிரிழப்புகளையும் குறைத்துள்ளது.

ஃபாஸ்டேக் முறை பயன்பாடு 96 சதவீதம்:

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண சாவடிகளில் உள்ள அனைத்து வழிகளிலும், ஃபாஸ்டேக் முறை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி 80 சதவீதமாக இருந்த இதன் பயன்பாடு, தற்போது 96 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மாநில நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டும் என ஆந்திரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்தன. அவ்வப்போது, இணைப்புத் தேவை, முன்னுரிமை, மற்றும் நிதிநிலை அடிப்படையில் மாநிலச் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிப்பது பற்றி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in