Published : 02 Aug 2021 02:51 PM
Last Updated : 02 Aug 2021 02:51 PM

‘பாகிஸ்தானில் மசூத் அசார் நடத்தும் தீவிரவாத ராஜ்யம்’-  அம்பலப்படுத்திய ஆல்வியின் ஐபோன்

காஷ்மீரில் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட மசூத் அசாரின் நெருங்கிய உறவினரும், ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியுமான இஸ்மாயில் ஆல்வியின் 3 ஐபோன்களில் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் மசூத் அசார் தனது உறவினர்கள் மூலம் தீவிரவாத அரசாங்கமே நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

காஷ்மீரில் நடந்த பதிலடி தாக்குதலில் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தளபதியான முகமது இஸ்மாயில் ஆல்வி சில தினங்களுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார். காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் - தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

அவர்கள் இந்திய பகுதிகளும் நுழையும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கொல்லப்பட்ட ஒருவர் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியும், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குலை முன்னின்று நடத்தியவருமான முகமது இஸ்மாயில் ஆல்வி என்பதும் தெரிய வந்தது.

முகமது இஸ்மாயில் ஆல்வி, ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஆவார். கொல்லப்பட்ட இஸ்மாயிலின் 3 ஐ-போன்கள் கைபற்றப்பட்டது. இந்த செல்போனில் இருந்த தகவல்கள், எண்கள் அனைத்தும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

ஆல்வி

இதில் மசூத் ஆசார் தனது நெருங்கிய உறவினரான இஸ்மாயிலுடன் தொடர்ந்து செல்போனில் தொடர்பில் இருந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. மேலும் தனது உறவினர்கள் அனைவரையுமே இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அவர் பயன்படுத்தி வந்துள்ளதும் உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூரில் மசூத் ஆசாத்தின் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி தீவிரவாத ராஜ்யமே நடந்து வந்துள்ளனர். மசூத் ஆசாத் சர்வதேச தீவிரவாதி என ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு விட்டதால் அவர் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் அவருக்கு பதிலாக அவர் சார்பாக அவரது சகோதரர் தீவிரவாத செயல்பாடுகளை ஒருங்கிணைந்து வருகிறார்.

இந்த தகவல் மட்டுமின்றி இஸ்மாயில் ஆல்வி யாருடன் தொடர்பில் இருந்தார், என்னென்ன நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது. அந்த செல்போன் விவரங்கள் தடயவியல் நிபுணர்கள் மூலம் சோதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x