Published : 02 Aug 2021 02:22 PM
Last Updated : 02 Aug 2021 02:22 PM

கோவிட்-19 உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு: நிபுணர்கள் கருத்து

கரோனா உள்ளிட்டநோய் பாதிப்புகளை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றுவதாக அறிவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில் மற்றும் விக்யான் பிரசார் ஆகியவை விடுதலையின் அம்ருத் மகோத்சவம் தொடர் கருத்தரங்கங்களில் புதிய இந்தியா @ 75 குறித்து ஏற்பாடு செய்த காணொலிக் கருத்தரங்கில் பல்வேறு விஞ்ஞானிகள் பேசினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவால், மனிதர்களுக்கு மாற்றாக செயல்பட முடியாது. ஆனால் பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். தரவுகளில் அதனை பயன்படுத்த முடியும் என்பதால் நமது இயந்திரங்களை அதற்குத் தகுந்தவாறு இயங்கச் செய்தால், நொடிப்பொழுதில் தானியங்கு செயல்முறைகளை அதனால் மேற்கொள்ள முடியும்.

கோவிட்-19 உள்ளிட்ட ஏராளமான நோய்களைக் கண்டறிவதிலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் இதனால் திறம்பட செயல்பட முடியும். பல்வேறு பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடைவதுதான் இதன் வெற்றியாகும்.

கடந்த ஆண்டுகளில், தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்து, அதிவிரைவாக வரும் சவால்களை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான தீர்வுகளுடன் எதிர்கொள்வதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரம்பரிய தொழில்நுட்பங்களால் இயலாத புதிய வாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கி வருவதாகவும், மருத்துவத்துறையுடன், வெவ்வேறு துறைகளில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களுக்கு அது உபயோகமாக இருக்கக்கூடும் என்றும் இந்த கருத்தரங்கில் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x