

கரோனா 3-வது அலை உருவாவது நிச்சயம். ஆனால் எப்போது, எப்படி 3-வது அலை ஏற்படும் என்பதை கணிக்க முடியாது என்று அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) தலைவர் சேகர் சி மண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழு செயல்படுகிறது. இதன் தலைவர் சேகர் சி மண்டே ஹைத ராபாத்தில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
கரோனாவின் டெல்டா வைரஸ் மிகவும் மோசமானது. ஆனால் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் புதிய கரோனா அலை உருவாகி யுள்ளது.
இந்தியாவில் கரோனா 3-வது அலை உருவாவது நிச்சயம். ஆனால் எப்போது, எப்படி 3-வது அலை உருவாகும் என்பதை கணிக்க முடியாது. கரோனா வைரஸ் உருமாறுவது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்.
நாடு முழுவதும் 37 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் உள்ளன. இந்தஆய்வகங்கள் மூலம் உருமாறிய கரோனா வைரஸ்கள் கண்டறியப்படுகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பரிசோதனை கருவி, பரிசோதனை முறைகளை சிஎஸ்ஐஆர் கண்டறிந்து வருகிறது.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும். தடுப்பூசி மூலம் வைரஸ் பரவல் தடுக்கப்படுவது அறிவியல்பூர்வமாக உறுதி செய் யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் சிஐஎஸ்ஆர் ஆய்வகங்கள் முக்கிய பங்காற்றி உள்ளன. ‘ஆன்டி வைரல்' மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இதனை பரிசோதிக்க மருத்து கட்டுப் பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ