இஸ்ரோவின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்துக்கு 70 ஏக்கர் ஒதுக்கீடு: அசாம் முதல்வர் தகவல்

இஸ்ரோவின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்துக்கு 70 ஏக்கர் ஒதுக்கீடு: அசாம் முதல்வர் தகவல்
Updated on
1 min read

குவாஹாட்டி: இஸ்ரோவின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்துக்கு 70 ஏக்​கர் நிலத்தை இலவச​மாக ஒதுக்​கீடு செய்வதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று அறிவித்​தார்.

இதுகுறித்து அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று கூறிய​தாவது: அசாம் மாநிலம் குவாஹாட்டி அருகே சந்​திரபூரில், ‘இஸ்ரோ டெலிமெட்​ரி, டிராக்​கிங் மற்​றும் கமாண்ட் நெட்​வொர்க்’ அமைப்​பின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்காக, இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​துக்கு (இஸ்​ரோ) சுமார் 200 பிகாக்​கள் அதாவது கிட்​டத்​தட்ட 70 ஏக்​கர் நிலத்தை அசாம் அரசு இலவச​மாக வழங்​கி​யுள்​ளது.

இந்த ரேடார் மையம் விண்​வெளி​யில் நடக்​கும் பல்​வேறு செயல்பாடு​களைக் கண்​காணித்து ஆய்வு செய்​யும்; மேலும் சேகரிக்​கப்​படும் தகவல்​களை அரசுக்​கும் பிற அறி​வியல் நிறுவனங்​களுக்​கும் பகிர்ந்து கொள்​ளும். இத்​தகைய தனித்துவமான திட்​டத்தை அசா​முக்கு அனு​ம​தித்​ததற்​காக பிரதமர் நரேந்​திர மோடிக்கு எனது நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்​. இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோவின் அதிநவீன ரேடார் ஆராய்ச்சி மையத்துக்கு 70 ஏக்கர் ஒதுக்கீடு: அசாம் முதல்வர் தகவல்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சித்தால் மீனவர்களுடன் இணைந்து திமுக போராடும்: ஸ்டாலின் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in