காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் மேலும் 3 உறுப்பினர்கள்

காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் மேலும் 3 உறுப்பினர்கள்
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையிலான அக்கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் குலாம் நபி ஆசாத், ஜோதி ராதித்ய சிந்தியா, ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருக்கின்றனர். சுர்ஜேவாலா, ஹரியாணா மாநில அமைச்சராக உள்ளார்.

இக்குழுவில் ஏற்கெனவே அகமது பட்டேல், ஜனார்தன் துவிவேதி, திக்விஜய் சிங், மதுசூதன் மிஸ்திரி, ஜெய்ராம் ரமேஷ், சி.பி.ஜோஷி, அஜய் மக்கான் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனி தலைமையில் 6 உறுப்பினர்களை கொண்ட கூட்டணியை முடிவு செய்யும் குழு, 10 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் குழு, பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தலைமையில் 7 உறுப்பினர்களை கொண்ட தகவல் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு ஆகியவை ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in