உள்கட்சி மோதலால் ‘ஆம் ஆத்மி’யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்

கேஜ்ரிவால் மீதான அதிருப்தி அதிகரிப்பதால் நெருக்கடி
உள்கட்சி மோதலால் ‘ஆம் ஆத்மி’யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்
Updated on
2 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர் ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள், அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைந்​துள்​ளனர். கட்சி ஒருங்கிணைப்​பாளர் அர்​விந்த் கேஜ்ரி​வால் மீதான அதிருப்​தி​யின் காரண​மாக அவர்​கள் இந்த முடிவை எடுத்​துள்​ளனர். இது ஆம் ஆத்மி கட்​சிக்கு பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

ஆம் ஆத்​மி கட்​சிக்கு மாநிலங்​களவை​யில் 10 எம்​.பி.க்​கள் உள்ளனர். கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான ராகவ் சத்தா எம்​.பி., அக்​கட்​சி​யின் மாநிலங்​களவை துணைத் தலை​வ​ராக இருந்து வந்​தார். சமீபத்​தில் அந்த பொறுப்​பில் இருந்து அவர் நீக்​கப்​பட்​டு, அவருக்கு பதிலாக அசோக் மிட்​டல் நியமிக்​கப்​பட்​டார். இந்த சூழலில், கடந்த சில வாரங்​களாகவே, கட்​சித் தலை​மைக்​கும் ராகவ் சத்தாவுக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்​தது. இந்நிலை​யில், அவர் அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வில் இணைவ​தாக நேற்று அறி​வித்​தார். அவருடன், அக்​கட்​சியின் மேலும் 6 மாநிலங்​களவை எம்​.பி.க்​களும் பாஜக​வில் இணைவதாக அறி​வித்​துள்​ளனர்.

‘நேர்மை இல்​லாத கட்சி’: டெல்லியில் செய்​தி​யாளர்​களிடம் ராகவ் சத்தா நேற்று கூறிய​தாவது: ஆம் ஆத்மி கட்​சி​யின் மாநிலங்​களவை எம்​.பி.க்​களில் மூன்​றில் 2 பங்​கினர் பாஜக​வில் இணைய முடிவு செய்​துள்​ளோம். என்​னுடன் சேர்ந்து ஸ்வாதி மாலி​வால், ஹர்​பஜன் சிங், சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், ராஜேந்​தர் குப்​தா, விக்​ரம் சாஹ்னி என மொத்​தம் 7 எம்​.பி.க்​கள் ஆம் ஆத்மியில் இருந்து வெளி​யேறி உள்​ளோம்.

எனது வாழ்​வின் 15 ஆண்​டு​களை ஆம் ஆத்மி கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக அர்ப்​பணித்​தேன். ஆனால், நேர்​மை​யான அரசி​யலை முன்​னிறுத்தி தொடங்​கப்​பட்ட இந்த இயக்​கம், தற்​போது அந்த பாதை​யில் இருந்து வில​கி​விட்​டது. நியாய​மான மனித​னாகிய நான் தவறான, நேர்மை இல்​லாத ஒரு கட்​சி​யில் இருந்​ததை இப்​போது உணர்​கிறேன். எனவே, ஆம் ஆத்மி கட்​சி​யில் இருந்து விலகி மக்​களுக்​காகப் பணி​யாற்ற முடி​வெடுத்​துள்​ளேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

7 பேரும் கையெழுத்​திட்ட கடிதத்தை மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனிடம் அவர் சமர்ப்​பித்​துள்​ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன், இனிப்பு வழங்கி வரவேற்றார்.

மாநிலங்​களவை​யில் ஆம் ஆத்மி கட்​சிக்கு மொத்​தம் 10 எம்​.பி.க்​கள் உள்ளனர். இந்த நிலை​யில், அங்​கிருந்து 7 எம்​.பி.க்​கள் விலகி பாஜக​வில் இணைவது, ஆம் ஆத்மிக்கு பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது.

கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி, ஒரு கட்​சி​யின் மூன்​றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் வில​கி, வேறொரு கட்​சி​யில் இணைந்​தால் மட்​டுமே அவர்​களின் பதவி பறி​போ​காது. இந்த நிலை​யில், தற்​போது மூன்​றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் ஒரே நேரத்​தில் வில​கி​யுள்​ள​தால், அவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டம் பாயாது.

இதற்கிடையே, ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகிய 3 பேரையும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவைத் தலைவரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக அக்கட்சியின் மற்றொரு எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

உள்கட்சி மோதலால் ‘ஆம் ஆத்மி’யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்
படிக்கல், கோலி அபார ஆட்டம்: குஜாரத் டைட்டன்ஸை வீழ்த்தியது ஆர்சிபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in