ஆந்திர மாநிலத்தில் மேலும் 7 நக்சலைட்கள் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

விஜயவாடா: ஆந்​தி​ர மாநிலத்தில் மேலும் 7 நக்​சலைட்​கள் நேற்று என்​க​வுன்ட்​டரில் உயி​ரிழந்​தனர்.

ஆந்​திர மாநிலம், அல்​லூரி சீதா​ராம ராஜு மாவட்​டம், மாரேடு​பல்லி வனப்​பகு​தி​யில் நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்​திய ரிசர்வ் போலீஸ் படை​யினர் மற்​றும் ஆந்​திர ஆயுதப்​படை போலீ​ஸார் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் நேற்று முன்​தினம் பாது​காப்பு படை​யினர், நக்​சலைட்​கள் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதில் நக்​சலைட் கமாண்​டர் ஹிட்மா உட்பட 6 பேர் கொல்​லப்​பட்​டனர்.

அப்​பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் தொடர்ந்து ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதில் நேற்று காலை 6 மணிக்கு நக்​சலைட்​களு​டன் மீண்​டும் துப்​பாக்​கிச் சண்டை ஏற்​பட்​டது.

இதில் ஜோகா​ராவ் என்​கிற டெக் சங்​கர், சீதா என்​கிற ஜோதி, சுரேஷ், கணேஷ், வாசு, அனி​தா, ஷம்மி ஆகிய 7 நக்​சலைட்​கள் கொல்​லப்​பட்​டனர். இதனால் இரு நாட்​களில் என்​க​வுன்ட்​டர்​களில் இறந்த நக்​சலைட்​கள் எண்​ணிக்கை 13 ஆக உயர்ந்​துள்​ளது.

இதற்​கிடை​யில் ஆந்​தி​ரா​வில் பல்​வேறு இடங்​களில் பதுங்கி இருந்த 50 நக்​சலைட்​களை போலீ​ஸார் கைது செய்து நேற்று விஜய​வாடா நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். இவர்​களை 15 நாள் நீதி​மன்ற காவலில் வைக்​க நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in