ஜூலையும் கடந்துவிட்டது, தடுப்பூசி பற்றாக்குறை போகவில்லை: ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

ஜூலை மாதமும் கடந்துவிட்டது, ஆனால், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை தீரவில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரோனா 3-வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவீதம் மக்களுக்கு இரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும்.

அதற்கு நாள்தோறும் நாட்டில் 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் முதல் 38லட்சம் வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை நாட்டில் 47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை பலமுறை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி வருகிறார். கடந்த ஜூலை 2-ம் தேதி ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி போதுமான அளவு வரவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ராகுல் காந்தி மீண்டும் பேசியுள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரி்ல் பதிவி்ட்ட கருத்தில் “ ஜூலை மாதம் கடந்துவிட்டது. தடுப்பூசி பற்றாக்குறை மட்டும் போகவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி எங்கே என்ற ஹேஸ்டேக்கையும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது முதல் டோஸ் தடுப்பூசியை கடந்த மாதம் 28-ம் தேதிதான் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால்தான் 29 மற்றும் 30-ம்தேதிகளில் அவர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in