

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லியில் பிரதமர் மோடி உட்பட கட்சித் தலைவர்களை சந்தித்த பின் நேற்று கூறியதாவது:
மேகேதாட்டு திட்டம் என்பது கர்நாடக அரசின் நீண்ட காலம் திட்டமாகும். அதனை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்த போது கர்நாடக அரசின் இந்த திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கும்படி கோரிக்கை விடுத்தேன்.
ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எனது கோரிக்கையை நிதானமாக கேட்டறிந்து, நேர்மறையாக பதிலளித்தார். எனவே திட்டமிட்ட வாறு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது உறுதி.
இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.