கரோனா தடுப்பூசி முதல் டோஸ் ராகுல் செலுத்திக் கொண்டார்

கரோனா தடுப்பூசி முதல் டோஸ் ராகுல் செலுத்திக் கொண்டார்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை சில நாட்களுக்கு முன் செலுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு ராகுல் காந்தி கடந்தவியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவற்றில் அவர்எந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்று தெரியவில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொள் வதில் ராகுல் தாமதம் செய்வது குறித்து பாஜக கடந்த காலத்தில் கேள்வி எழுப்பியது. ராகுலும் அவரது குடும்பமும் மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை ஏற்படுத்துவதாக பாஜக குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக்கொண்டதாக கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சி கூறியது. அப்போது அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் பிறகு தடுப்பூசி எடுத்துக்கொள்வார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in