எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிப்பெண்கள் நியமனம்

எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிப்பெண்கள் நியமனம்
Updated on
1 min read

விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப்பெண்கள் நியமிக்கப் பட உள்ளனர்.

மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற்பார்கள். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

டெல்லி-ஆக்ராவை தொடர்ந்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் கேட்டி மேன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in