இந்தியாவின் பகுதிக்குள் சீனா - பாகிஸ்தான் வர்த்தக பாதை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு

இந்தியாவின் பகுதிக்குள் சீனா - பாகிஸ்தான் வர்த்தக பாதை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு
Updated on
1 min read

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும், சீனாவின் செங்குடு நகரில் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதன் பின் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘காஷ்மீரில் நிலைமை மோச மாக உள்ளதை, சீனாவிடம் பாகிஸ்தான் தெரிவித்தது. சீனா-பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதை அமைக்கப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய வெளி யுறவு செய்தி தொடர்பாளர் அரிந் தம் பாக்சி நேற்று கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என பல முறை கூறிவிட்டோம். ஜம்மு - காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது.

சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தக பாதைக்காக அவர்கள் அறிவித்திருக்கும் பகுதி, இந்தியாவுக்கு சொந்தமானது. அதை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்பதையும் சீனாவிடம் இந்தியா ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடந்த தேர்தலையும் இந்தியா நிராக ரிக்கிறது. இவ்வாறு அரிந்தம் பாக்சி கூறினார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in