Published : 30 Jul 2021 05:03 PM
Last Updated : 30 Jul 2021 05:03 PM

கரோனாவுக்கு எதிரான போராட்டம்; மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது: மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

நோய் கட்டுப்பாடு தேசிய மையத்தின் 112வது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவாருடன் இன்று தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நுண்ணுயிர் எதிர்ப்புக்கான (AMR) முழு மரபணு வரிசைமுறை தேசிய குறிப்பு ஆய்வகம் மற்றும் புதிய உயிர்பாதுகாப்பு நிலை (BSL) 3 ஆய்வகம், முதுநிலை மாணவர்கள் விடுதி மற்றும் விருந்தினர் இல்லத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ஆய்வக வளாகத்தில், 5 தளங்கள் மற்றும் 22 பிஎஸ்எல்-2 ஆய்வகங்கள் உள்ளன.

நோய்கட்டுப்பாட்டு மையத்தின் பங்களிப்பை பாராட்டி அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது என பாராட்டினார். நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் 112வது ஆண்டு சாதனை பாரம்பரியத்தில், இன்று புதிய பரிமாணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, நோய்கட்டுப்பாட்டு தேசிய மையம் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இதன் பணியால் இந்தியா மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த உலகமும் பயனடைய முடியும். வரும் ஆண்டுகளில் சாதனைகள் படைப்பதற்கான இலக்குகளை நோய்கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அதிகாரிகள் வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பருவநிலை மாற்றத்துக்கான தேசிய திட்டத்தின் கீழ், காற்று மாசு மற்றும் வெப்பம் ஆகியவற்றுக்கான தேசிய சுகாதார தழுவல் திட்டங்களையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x