

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சையது ஆதரவு அளித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த குற்றச்சாட்டை ஹபீஸ் சையது தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் மறுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில் ‘தனது பெயரில் பொய்யான ‘ட்விட்டர்’ கணக்கை துவக்கி இந்திய அரசு சொந்த மக்களையே முட்டாள்களாக்கி விட்டது’ என கருத்து தெரிவித்துள்ளார்.