Published : 29 Jul 2021 02:35 PM
Last Updated : 29 Jul 2021 02:35 PM

ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடி: பிரதமர் மோடி சாதனை

புதுடெல்லி

பிரதமர் மோடியை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்துள்ளது.

பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் தனது கருத்துகள், தகவல்கள், அரசு திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அவரது ட்விட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.

பிரதமர் மோடியை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 7 கோடியை எட்டியுள்ளது. பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 7 கோடியை கடந்த நிலையில், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பலரும் #CongratsModiJiFor70M என்ற ஹேஸ்டேக்கில் கருத்து தெரிவித்தனர். இதனால், இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2009-ல் முதல்முதலாக ட்விட்டர் கணக்கை தொடங்கினார். பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 2010-ல் ஒரு லட்சமாக உயர்ந்தது. 2011-ல் 4 லட்சமாக உயர்ந்தது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் 6 கோடியை கடந்தது.

உலக அளவில் ட்விட்டரில் அதிகமாக பின்தொடர்பவர்கள் பிரதமர் மோடி 11-வது இடத்தில் உள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 12.98 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ட்விட்டரில் 3.09 கோடி பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x