Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

வரதட்சணை வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி அறிவிப்பு

கேரள சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

காந்திய வழியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது சமீபத்தில் உண்ணாவிரத போராட் டம் மேற்கொண்டார்.

கேரள மாநிலத்தில் பல இடங்களில் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் அதிக அளவில் பதிவாகி வருவதை நான் அறிந்தேன். 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை வரட்சணைக் கொடுமை காரணமாக 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் 2016-ம் ஆண்டு முதல் 2021 வரையிலான காலத்தில் இந்த உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 54 பேர் வரட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ளனர். 2021, 2021-ம்ஆண்டுகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வரதட்சணை கேட்டு பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வரதட்சணைக் கொடுமை வழக்குகள் தொடுக்கப்படும் நபர்கள் மீதுதயவு தாட்சண்யம் பார்க்கமாட்டோம். இதுபோன்ற சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு மேற்கொண்டால் இதை தடுக்க முடியும். இவ்வாறு பினராயி கூறினார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x