

பிஹாரிலிருந்து மாநிலங்க ளவைக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற இரு உறுப்பினர்களுக்கான தேர்த லில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கு களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாக புகார் எழும்பி யுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் களான பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ராம்கிருபால் யாதவ் (பாஜகவில் இணைந்தவர்) மற்றும் லோக்ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 7, 2016 வரையில் உள்ளன. ஆனால் இவர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இந்த இடங்கள் காலியாகின. இதையடுத்து இந்த மூன்று உறுப்பினர்களின் இடங்களுக்கு இடைத்தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் அதன் தேசிய தலைவர் சரத் யாதவ், தேசிய பொதுச்செயலாளர் குலாம் ரசூல் பால்யாவி மற்றும் நிதீஷ் குமாரின் முன்னாள் ஆலோசரகரான பவண் குமார் வர்மா ஆகிய மூவரும் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் சரத்யாதவை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், மக்களவைத் தேர்தலில் மதேபுறா தொகுதியில் போட்டி யிட்டு, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கிரிமினல் வேட்பாளர் பப்பு யாதவிடம் தோல்வி அடைந்தவர்.
எனினும், ஐக்கிய ஜனதா தளத்தின் மற்ற இரு வேட்பாளர் களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் சார்பில் இருவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ஐக்கிய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட சாபீர் அலி, அக் கட்சிக்கு நிதி உதவி செய்து வந்தவர். மற்றொருவரான அனில் சர்மா, மும்பை மற்றும் டெல்லியில் ரியல் எஸ்டேட் நடத்தும் தொழில் அதிபர்.
இதனால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூபாய் முப்பது லட்சம் முதல் ஒரு கோடி வரை விலை கொடுத்து அவர்களது வாக்குகளை வாங்கும் முயற்சி நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது. இதன் மீது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி பிஹார் முன்னாள் முதல்வர் நிதீஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான மஞ்சித்சிங் எம்.எல்.ஏ.வின் வீட்டில் கடந்த புதன்கிழமை ஒரு கூட்டம் நடந்தது.
இந்த இடைத்தேர்தலுக்கான மனுக்களை வாபஸ் வாங்கும் இறுதி நாளான வியாழக்கிழமை ஆறாவது வேட்பாளராக தாக்கல் செய்த சுயேச்சை எம்.எல்.ஏ. திலீப் ஜெய்ஸ்வால் தனது மனுவை வாபஸ் பெற்றார். எனினும், வரும் 19-ம் தேதி இரு உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இனி பாரதிய ஜனதா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் நிலையை விளக்குவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
புதிய முதல்வராக ஜிதன்ராம் பதவி ஏற்ற பின் அவரது ஆட்சியை தக்க வைக்க எடுத்ததை விட அதிகமாக, மாநிலங்களைவை தேர்தலில் வெற்றி பெற முயற்சிகள் செய்து வருகிறார் நிதிஷ்குமார்.