2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கிளினிக்கல் பரிசோதனை: சீரம் நிறுவனத்துக்கு வல்லுநர்கள் குழுஅனுமதி

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read


2 வயது முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கரோனா தடுப்பு மருந்தின் 2 மற்றும் 3-வதுகட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு சில நிபந்தனைகளுடன் இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி பரி்ந்துரைத்துள்ளது

இந்த கிளினிக்கல் பரிசோதனை 10 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 2 முதல் 11 வயதுள்ள 460 குழந்தைகளுக்கும், 12 முதல் 17வயதுள்ள 920 குழந்தைகளுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்தியாவின் சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் என்ற குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் முதல்கட்ட கிளினிக்கல் பரிசோதனை 1400 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் எந்தக் குழந்தைக்கும் எதிர்மறையான பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையடுத்து 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனைக்கு சீரம் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததையடுத்து, அந்த விண்ணப்பத்தை இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பு திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, திருத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அறிக்கையை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இதையடுத்து சில நிபந்தனைகளுடன் 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனை நடத்த சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்தியஅரசு வட்டாரங்கள் கூறுகையில் “ மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு, சீரம் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அறிக்கையை ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் முடிவில் சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் மருந்தின் 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனயை சில நிபந்தனைகளுடன் 2 வயது முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு நடத்த அனுமதியளித்து பரிந்துரைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பாஜக எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அப்போதுபேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “ குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துதல் விரைவில் தொடங்கும். நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன, குழந்தைகளுக்கும் மிக விரைவில் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in