

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல்கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தன்னைவேண்டுமென்றே வழக்கில் சிக்கவைத்த கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள முன்னாள்டிஜிபி சிபி மேத்யூஸ் மற்றும்போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.