Published : 27 Jul 2021 02:35 PM
Last Updated : 27 Jul 2021 02:35 PM

அடுத்த மாதம் முதல்  குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி? - மன்சுக் மாண்டவியா சூசகம்

இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தற்போது 42 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும் எனத் தகவல் வெளியானது.

மன்சுக் மாண்டவியா

இதனிடையே இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று காலை நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் எனவும், இதுதொடர்பாக பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதிக்கு செல்லும்போது மக்களிடையே தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்த பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x