புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
Updated on
1 min read

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களவை யில் நேற்று அவர் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் (எம்எஸ்எம்இ) உற்பத்தி பொருளை பெற்று அதற்குரிய தொகையை 45 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலுவை தொகை வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி தொகை வழங்குவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். நிலுவைத் தொகை என்றவுடன் அது மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்க வேண்டிய நிலுவை என்பது மட்டு
மல்ல, மாநில அரசுகள் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையும் இதில் அடங்கும்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதி ஆண்டில் மைனஸ் 7.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும் நமது பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது. இதன் காரணமாகத்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in