அசாம் - மிசோரம் எல்லை பகுதியில் மீண்டும் வன்முறை: பிரச்சினையைத் தீர்க்க 2 மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா உத்தரவு

அசாம் - மிசோரம் எல்லை பகுதியில் மீண்டும் வன்முறை: பிரச்சினையைத் தீர்க்க 2 மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா உத்தரவு
Updated on
1 min read

அசாம், மிசோரம் மாநில எல்லையில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 155 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து வருகின்றன. இதில் சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மிசோரத்தை ஒட்டியுள்ள அசாம் மாவட்டமான சச்சாரின் லைலாபூரில் மிசோரம் அரசு அதிகாரிகள் கடந்த ஆண்டுஅக்டோபர் 16-ம் தேதி ஒரு கரோனா பரிசோதனை மையத்தை அமைத்தனர். இதற்கு அசாம் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்போது அப்பகுதியில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் நேற்று வன்முறை வெடித்துள்ளது.

நேற்று காலை மிசோரம் மாநில நிர்வாகம் 6.5 கிலோ மீட்டர் பகுதி இடத்தை ஆக்கிரமித்ததாக கூறி, அதை மீட்க அசாம் மாநிலம் சச்சார் மாவட்ட அதிகாரிகள் எல்லைக்கு வந்துள்ளனர். இதற்கு மிசோரம் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால்தான் எல்லையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகள் வழியாக வரும் அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறும், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருமாறும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, மிசோரம் முதல்வர் சோரம்தங்கா ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இரு மாநில முதல் வர்களும், எல்லைப் பிரச்சினை குறித்து நேற்று காலை ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.

சோரம்தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “அப்பாவி மக்கள் சச்சார் மாவட்டம் வழியாக மிசோரமுக்குள் வரும் போது தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பொருட்கள் அங்கிருந்தகுண்டர்களால் சூறையாடப்பட் டுள்ளன. இந்த வன்முறைகளை எப்படி நியாயப்படுத்தப் போகி றீர்கள்?” என்று கேள்வி எழுப் பினார்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பதில் கூறும்போது, “முதல்வர் சோரம்தங்கா அவர்களே, எங்கள் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சாவடிகளை அகற்றுமாறு மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கூறி வருகிறார். இப்படிச் செய்தால் நாங்கள் எப்படி அரசை நடத்த முடியும்? நீங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்ப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

போலீஸார் காயம்

எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை அசாமைச் சேர்ந்த 7 போலீஸார் காயமடைந்துள்ளனர். மேலும் சச்சார் மாவட்ட ஆட்சியரின் வாகனம் அடித்து நொருக்கப்பட்டது. இதற்கு மிசோரம்பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில்அசாம்மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதியில்கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in