

ஒடிசாவின் ரூர்கேலா நகரில், தடை செய்யப்பட்ட ‘சிமி’ (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) அமைப்பைச் சேர்ந்த 5 தீவிர வாதிகள் கைது செய்யப்பட் டுள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
ஒரு பெண் உள்ளிட்ட இந்த 5 பேரும் மத்தியப் பிரதேச மாநிலம் கண்டுவா நகர சிறையில் இருந்து தப்பியவர்கள். ரூர்கேலா நகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த இவர்களை ஒடிசா மற்றும் தெலங்கானா போலீஸார் செவ்வாய்க் கிழமை இரவு 3 மணி நேர அதிரடி நடவடிக்கைக்கு பிறகு கைது செய்தனர்.
இதுகுறித்து ஒடிசா காவல் துறை இயக்குநர் கே.பி. சிங் நேற்று கூறும்போது, “இவர்கள் முகம்மது காலித், அஜ்மத் கான், ஜாகீர் கான், மகபூப் கான் மற்றும் இவரது தாயார் நஜ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆந்திரா, தெலங்கானா, உ.பி., ம.பி.யில் இவர்கள் ‘சிமி’க்காக செயல்பட்டு வந்தனர்.
ரூர்கேலாவில் போலி பெயர் களில் தங்கி, கொள்ளை மற்றும் பிற வழிகளில் பணம் திரட்டி வந் துள்ளனர். இவர்கள் அனைவரும் ம.பி.யின் கண்டுவா பகுதியைச் சேர்ந்தவர்கள். 17 வழக்குகளில் இவர்களுக்கு தொடர்புள்ளது. என்.ஐ.ஏ.வும் இவர்களை தேடி வந்தது. கைது செய்யப்பட்டபோது 5 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங் கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.