

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு மேல் அதிகரித்துள்ளனர். புதிதாக 39 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 39 ஆயிரத்து 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 2,977 பேர் அதிகரித்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.31 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 2,977 பேர் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். அதாவது தொற்று அதிகரித்துள்ளது.
கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 3 கோடியே 5 லட்சத்து 79 ஆயிரத்து 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.35 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 416 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து20 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 54 ஆயிரத்து 444 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 45 கோடியே 74 லட்சத்து 44 ஆயிரத்து 11 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 43.51 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது