

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன். திரைத் துறையில் இவரது சாதனையை பாராட்டி என்டிடிவி சார்பில் நேற்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வயது முதிர்ந்த காலத்திலும் சலிக்காமல் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் தெரிவித்தார். மேலும் அவர், ‘‘எனது வயதுக்கு பொருத்த மான கதாபாத்திரங்களை இயக் குநர்கள் உருவாக்கி எனக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறையில் ஐந்து தலை முறை நடிகர்களுடன் நடித்து வருவது எனக்கு கிடைத்த பாக்கிய மாக கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையிடம் இருந்தும் வெவ்வேறு விஷயங்களை கற்று வருகிறேன். இதனால் எனது கலைப் பயணம் தொய்வு இல்லா மல் மிகுந்த மகிழ்ச்சியாகவே நகர்ந்து வருகிறது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமிதாப்பின் மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சன், மகள் ஸ்வேதா மற்றும் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.