Last Updated : 16 Feb, 2016 08:02 AM

Published : 16 Feb 2016 08:02 AM
Last Updated : 16 Feb 2016 08:02 AM

ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவு அளித்த ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக தலைவர் அமித்ஷா வலியுறுத்தல்

டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளித்த ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9-ம் தேதி நடந்த தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியின் போது இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதர வாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் தலைவர் கண்ணய்யா குமாரை போலீஸார் கைது செய்து, தேசவிரோத வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு காங்கிரஸ், இடதுசாரி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றன. மேலும், ஜேஎன்யூ மாண வர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேச விரோத செயலில் ஈடுபடுவோருக்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், அவர்களுடன் கைகோர்த்துவிட் டாரா? என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ‘பிளாக்கில்’ அவர் எழுப்பிய கேள்விகள்:

தலைநகரில் உள்ள பிரபலமான ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரை சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கு தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் ஆதரவு தெரிவிக்கின்றனர். அப்படியென் றால் ராகுல் காந்திக்கு தேசநலனில் அக்கறை இல்லையா? அதை பார்த்துக் கொண்டு மத்திய அரசும் அமைதியாக இருக்க வேண்டுமா?

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியவர்களுக் காக குரல் கொடுப்பது தான் தேச நலனா? ஒருவேளை பிரிவினை வாதிகளுடன் ராகுல் கைகோர்த்து விட்டாரா? இதன் மூலம் நாட்டை மீண்டும் பிளவுப்படுத்த அவர் விரும்புகிறாரா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், துணைத் தலைவர் ராகுலும் பதில் அளிக்க வேண்டும். தவிர நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மாக மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் கருத்து

பாகிஸ்தானுக்கும், அப்சல் குரு வுக்கும் ஆதரவாக முழக்கம் எழுப்பி யவர்கள் துரோகிகள். அவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலை வர் தத்தாத்ரேய ஹோசபலே தெரி வித்துள்ளார். ஜேஎன்யூவில் நடந்த சம்பவம் ஒரு சதிச் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தாக்குதலின் போது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினருடன் இணைந்து அகில இந்திய தீவிர வாத தடுப்பு முன்னணி தலைவர் மணிந்தர்ஜித் சிங் பிட்டா ஜேஎன்யூ மாணவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேச விரோத செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே போல் சிவசேனா தனது ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங் கத்தில், ‘ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக் கும் அரசியல்வாதிகளின் அரசியல் அந்தஸ்தை மத்திய அரசு பறிக்க வேண்டும். நாட்டுக்கு எதிராக முழக்கமிடுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

எதிரக்கட்சிகள் கண்டனம்

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர் ஹபீஸ் சையத்தின் ஆதரவுடன் ஜேஎன்யூ போராட்டம் நடந்து வருவதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரான மணிஷ் திவாரி தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘இந்த விவ காரத்தை ராஜ்நாத் சிங் மதவாத மாக மாற்றப் பார்க்கிறார். பிரதமரின் பிரியாணி நண்பரான நவாஸ் ஷெரீப் பிடம், தீவிரவாதி ஹபீஸ் சையத்தை கைது செய்யும்படி தெரிவியுங்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் தலைவர் கரத்:

ஜேஎன்யூ விவகாரத்தில் ஆதரவு குரல் எழுப்புவதன் மூலம் எங்கள் மீது தேச விரோதி என்ற முத்திரை விழுந்தாலும் அதற்காக கவலைப் பட மாட்டோம். சீதாராம் யெச்சூ ரிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள், கட்சி தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டும் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.

ஐஜத எம்பி கே.சி.தியாகி:

கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல் கட்சி களின் சுதந்திரத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலாகும். நெருக்கடி நிலையின் போதுதான் இத்தகைய சம்பவங்களைக் கண்டோம். தற் போதைய நிலவரத்தைக் காணும் போது மீண்டும் புதிய வகையான நெருக்கடி நிலை வந்துவிட்டதோ என தோன்றுகிறது.

யெச்சூரிக்கு கொலை மிரட்டல்

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய் யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருந்தார். அத் துடன் மாணவர்களின் போராட்டத் துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீதாராம் யெச் சூரிக்கு நேற்று முன் தினம் தொலை பேசி மூலம் மூன்று முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அப் போது எதிர்முனையில் பேசிய நபர்கள், ‘‘ஜேஎன்யூ மாணவர் களுக்கு ஆதரவு அளிப்பதை யெச்சூரி நிறுத்திக் கொள்ள வேண் டும். இல்லாவிட்டால் நாங்கள் அவரை பார்த்துக் கொள்வோம்’ என மிரட்டியுள்ளனர். இது குறித்து டெல்லி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்த வழக்கையும் போலீஸார் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

பிளவை ஏற்படுத்தும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டம், கோபூர் என்ற இடத் தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத் தில் ராகுல் காந்தி பேசியதாவது:

மக்கள் மீது தங்கள் கருத்தை திணிப்பதன் மூலம் அவர்களி டையே பிளவும் வெறுப்புணர்வும் ஏற்படுத்தும் திட்டத்துடன் பாஜக வும் ஆர்எஸ்எஸ்ஸும் செயல்படு கின்றன. சமீபத்தில் டெல்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத் தில் நிகழ்ந்த சம்பவங்கள் மூலம் இதை நாம் உணர முடிகிறது. நாட்டின் பன்முக கலாச்சாரம் மற்றும் மக்களின் நம்பிக்கைகளை பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் மதிப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

அனைத்து கலாச்சாரங்களை யும் நாங்கள் மதிக்கிறோம். மக்க ளிடையே ஒற்றுமை, சகோதரத் துவம், நல்லிணக்கம் ஆகியவற் றில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பிஹாரைப் போல அசாமிலும் பாஜக தோல்வியை சந்திக்கும். அசாமில் கடந்த 15 ஆண்டுகளில் சிறப்பான பணிகளை முதல்வர் தருண் கோகோய் செய்துள்ளார். இதற்கான பலன்கள் வரும் தேர்த லில் கிடைப்பது உறுதி. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x