ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டியது வியாபாரம்: மார்க்கெட்டில் காய்கறி விற்றார் நடிகை

ரசிகர்கள் கூட்டத்தால் களைகட்டியது வியாபாரம்: மார்க்கெட்டில் காய்கறி விற்றார் நடிகை
Updated on
1 min read

நடிகர் மோகன்பாபுவின் மகள் மஞ்சு லட்சுமி தெலுங்கு தொலைக் காட்சியில் வெளியாகும் ‘மேமு சைத்தம்’ (நாங்கள் உட்பட) எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவி களையும் வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சிக்காக தெலுங்கு மட்டுமின்றி தமிழில் ‘என்னமோ ஏதோ’, ‘தடையற தாக்க’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ரகுல் பிரீத் சிங், ஹைதராபாத் கூகட்பல்லி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை 10 மணிக்கு காய்கறி விற்றார். இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினமே தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். இதனால் அவரிடம் காய்கறிகள் வாங்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு நடிகை பிரீத் சிங் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in