Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

மக்களவையில் 168 எம்.பி.க்கு 2-க்கும் மேற்பட்ட பிள்ளைகள்

மக்களவையில் 168 எம்.பி.க் களுக்கு 2-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு புதிய மசோதாவை வரையறுத்துள்ளது. இதேபோல தேசிய அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக 4 எம்.பி.க்கள் தனி நபர் மசோதாக்களை தயார் செய்துள்ளனர்.

இதன்படி பாஜகவை சேர்ந்தவிஷ்ணு தயாள் ராம், ரவி கிஷண், சுஷில் குமார் சிங் மற்றும்ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தஅலோக் சுமன் ஆகியோர் இந்த மசோதாக்களை மக்களவை யில் நேற்று பட்டியலிட்டிருந் தனர். எதிர்க்கட்சிகளின் அமளிகாரணமாக தனிநபர் மசோதாக்கள் எடுத்து கொள்ளப்படவில்லை. எனினும் இந்த மசோதாக்கள் அடுத்த வாரம் தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

மக்களவை புள்ளிவிவரங் களின்படி, 168 எம்.பி.க்களுக்கு 2-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் உள்ளனர். அதிகபட்சமாக ஆளும்பாஜக எம்.பி.க்களில் 105 பேர், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களில் 66 பாஜக எம்.பி.க்களுக்கு 3 பிள்ளைகளும், 26 எம்.பி.க்களுக்கு 4 பிள்ளைகளும், 13 எம்.பி.க்களுக்கு 5 பிள்ளைகளும் உள்ளனர்.

ஏஐயுடிஎப் கட்சியை சேர்ந்த மவுலானா பக்ரூதீன் அஜ்மல், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த திலேஸ்வர், அப்னா தளத்தை சேர்ந்த பகாரி லால் ஆகியோருக்கு தலா 7 பிள்ளைகள் உள்ளனர். காங்கிரஸை சேர்ந்த முகமது சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த சமதானி ஆகியோருக்கு தலா 6 பிள்ளைகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x