

நாடு முழுவதும் பல்வேறு பிரச் சினைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம், சாலை மறியல் ஆகியவை அன்றாட காட்சியாகிவிட்டது. ஒரு சில நேரங்களில் இந்த ஆர்ப்பாட்டங் கள் கலவரத்தில் முடிந்து விடுகின் றன. அப்போது கலவரக்காரர்களை விரட்டியடிக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர். வஜ்ரா என்ற வாகனம் மூலம் தண்ணீரை மிக வேகமாக பீய்ச்சி அடிக்கினறனர். மேலும், தடியடியும் நடத்துகின்றனர். இதனால் பலருக்கு படுகாயம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில் கலவரக்காரர்களை விரட்டியடிக்க மிளகாய் தூளை பயன்படுத்தும் புதிய உத்தியை போலீஸார் கண்டு பிடித்துள்ளனர். மேலும் மிளகாய் தூளுடன், மார்பிள் தூளையும் பயன்படுத்தவுள்ளனர்.
இந்த யோசனையை பரிந்துரைத் துள்ள ஹரியாணா மாநில ஹிசார் மாவட்ட போலீஸ் ஐஜி அனில்குமார் ராவ் கூறும்போது, ‘‘பிளாஸ்டிக் புல்லட்கள் மூலம் கலவரத்தை அடக்க முயலும்போது பொது மக்களுக்கு பலத்த காயம் ஏற்படு கிறது. அதற்கு பதில் மிளகாய் தூள் மற்றும் மார்பிள் தூள்களை பயன் படுத்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மேலும், இந்த முறையை மிகவும் தவிர்க்க முடியாத தருணங் களில் மட்டுமே பயன்படுத்துவோம்’’ என்றார். மிளகாய் தூளை தூவி கலவரக்காரர்களை கலைக்க போலீஸார் தற்போது பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.