கரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

கரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு
Updated on
1 min read

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆய்வை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது முற்றிலும் தவறானது. இந்தியாவின் வலுவான மற்றும் விதிகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்படும் உயிரிழப்பு பதிவினால், தொற்று நோய் மற்றும் அதன் மேலாண்மை கொள்கை யின்படி ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். ஆனால் உயிரிழப்புகளைத் தவற விடுவதற்கான வாய்ப்பு இல்லை.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 2-வது அலையில் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு அதிகரித்த போதும் இன்றைய நிலையில், உயிரிழப்பு விகிதம் 1.34% ஆகவே உள்ளது. உயிரிழப்புகளை பதிவு செய்ய மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மாவட்டங் களில் ஏற்படும் பாதிப்புகளையும், உயிர் இழப்புகளையும் பதிவு செய்ய தவறியிருந்தால் அதனை தடுப்பதற்காக மருத்துவ மனைகளில் முழு ஆய்வை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in