

சியாச்சின் பனிச்சிகரத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கினர். 6 நாட்களுக்கு பின் 9 ராணுவ வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
மோசமான வானிலையால் வீரர் களின் உடல்கள் சியாச்சின் ராணுவ முகாமில் வைக்கப்பட்டு, அண்மையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் முஷ்டாக் அகமதுவின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான பார்னபல்லிக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு குடும்பத்தினர், நண்பர் கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின், முழு ராணுவ மரியாதையுடன் முஸ்லிம் மத வழக்கப்படி உடல் அடக்கம் செய் யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆந்திர அரசு சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர் முஷ்டாக் அகமதுவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி வழங்கினார். மேலும் முஷ்டாக் அகமதுவின் மனைவிக்கு அரசு வேலையும் வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்படும் என தெரிவித்தார்.