

தேசத் துரோக புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சாணக்கியபுரியில் உள்ள பாதுகாப்புப் படை அலுவலகத்தின் மேஜிஸ்ட்ரேட் முன்னால் கிலானி ரகசியமாக ஆஜர் படுத்தப்பட்டார். நேற்று பாட்டியாலா கோர்ட் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டதையடுத்து இம்முறை விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சாணக்கிய புரியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கிலானியை திஹார் சிறைக்கு கொண்டு செல்லும் போது சாணக்கியபுரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பேராசிரியர் கிலானி சார்பாக ஜாமின் மனு செய்யப்பட்டுள்ளது, இதுவும் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
பிப்ரவரி 10-ம் தேதி பிரஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கிலானி மேடையில் இருக்கும் போது மற்ற 3 பேர் அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள் என்று கிலானியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.