

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாக விளங்கியவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (28). கொல்லம் மாவட்டம், பெருமண் பகுதியைச் சேர்ந்த இவர், கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்ஜே) ஆவார். மேக்கப் கலைஞர் மற்றும் டி.வி. செய்தி வாசிப்பாளரான இவர், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் விளங்கி வந்தார்.
திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த வந்த அனன்யா, அண்மையில் நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலில் மனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்தார். கேரள தேர்தல் களத்தில் போட்டியிட்ட முதல் திருநங்கை வேட்பாளர் என்ற பெயரை அவர் பெற்றார். என்றாலும் தேர்தலுக்கு முன் அவர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் அனன்யா, கொச்சியில் அவர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அனன்யா தற்கொலை செய்து கொண்டிருக் கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.