கர்நாடக சட்டசபையை முற்றுகையிட்ட விவசாயிகள்: கரும்பு விலையை உயர்த்த கோரிக்கை

கர்நாடக சட்டசபையை முற்றுகையிட்ட விவசாயிகள்: கரும்பு விலையை உயர்த்த கோரிக்கை
Updated on
1 min read

கரும்பு விலையை உயர்த்தக்கோரி விவசாயிகளும், பெங்களூரில் குடி சைகளை அகற்றுவதைக் கண் டித்து குடிசைவாசிகளும் திங்கள் கிழமை பேரணியாக சென்று கர்நாடக சட்டசபையை முற்றுகை யிட முயற்சித்ததால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை கூட்டத் தொடர் பெங்களூரில் உள்ள விதான சவுதா கட்டிடத்தில் திங்கள் கிழமை தொடங்கியது. இதை யடுத்து சட்டசபை வளாகத்தைச் சுற்றி பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு, 2 கி.மீட்டர் தொலை வுக்கு 144 தடை உத்தரவு பிறக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகா முழுவதிலும் உள்ள கரும்பு விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் கரும்பு விலையை உயர்த்தக்கோரியும், நிலுவை யில் உள்ள இழப்பீட்டை வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். காலை 10 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணி, சுதந்திர பூங்கா வழியாக சட்டசபையை முற்றுகையிட சென்றனர். இடையில் வழிமறித்த போலீஸார், போராட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகளில் 1800 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

குடிசைவாசிகள் போராட்டம்

மற்றொருபுறம் பெங்களூரில் உள்ள குடிசைப்பகுதிகளை அகற்றும் முயற்சியில் இறங்கியுள்ள கர்நாடக குடிசை மாற்று வாரி யத்தைக் கண்டித்து டவுன் ஹால் எதிரே சுமார் 25 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தலித் பேந்தர்ஸ்' சார்பாக நடத்தப்பட்ட இப்போராட்ட‌த்தில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோஷம் எழுப்பினர்.

இவர்களின் மைசூர் வங்கி சதுக்கத்திலிருந்து சட்டசபையை நோக்கி முன்னேற முற்பட்டனர். அப்போது அவர்களை தடுத்த காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா போராட்டக் காரர்களை சந்தித்து, சட்ட சபையில் இதுகுறித்து தீர்க்க மான முடிவு எடுப்பதாக கூறி னார். இதனைத்தொடர்ந்து குடிசை வாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே சுமார் 40 ஆயிரம் பேர் சட்டசபையை முற்று கையிட முயற்சித்ததால் பெங்களூ ரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பெங்களூரின் பிரதான சாலைகள் திணறின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in