விண்வெளி தேவைக்கு பயன்படும் உலோகம்; இந்தியாவில் தயாரித்து டிஆர்டிஓ சாதனை

விண்வெளி தேவைக்கு பயன்படும் உலோகம்; இந்தியாவில் தயாரித்து டிஆர்டிஓ சாதனை
Updated on
1 min read

தொழிற்துறை பயன்பாட்டுக்கான அதிக சக்தி வாய்ந்த பீட்டா டைட்டானியம் கலவை உலோக பாகத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ளது.

இரும்பை விட எடை குறைவான இந்த உலோகம், அதேசமயம் வலிமையானதாக இருக்கும். விண்வெளி பயன்பாட்டுக்கு எடை குறைந்த பொருட்களை தயாரிக்க தேவைப்படுபவர்களுக்கு இந்த உலோகம் உதவிகரமாக இருக்கும்.

விண்வெளிப் பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை உள்நாட்டில் உருவாக்கும் விதத்தில், அதிக சக்திவாய்ந்த மெட்டா ஸ்டேபிள் பீட்டா டைட்டானியம் உலோக கலவை பாகத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்( டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.


வளர்ந்த நாடுகள் மட்டுமே பயன்படுத்தி வரும் இந்த உலோகத்தை தற்போது டிஆர்டிஓ தயாரித்துள்ளது.

இதில் வனடியம், இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளது. விண்வெளி பயன்பாட்டுக்கான இந்த உலோக பாகத்தின் ரசாயண குறியீடு Ti-10V-2Fe-3Al. இதை ஹைதராபாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் (DMRL) உருவாக்கியுள்ளது. இந்த உலோக கலவையை, சமீபகாலமாக வளர்ந்த நாடுகள் பல பயன்படுத்தி வருகின்றன.

வழக்கமாக இதுபோன்ற பொருட்கள் தயாரிப்பதற்கு Ni-Cr-Mo எஃகுகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் எடையை குறைப்பதற்காக பீட்டா டைட்டானியம் கலவை உலோகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உறுதியுடன் இருக்கும்.

இந்த அதிக சக்திவாய்ந்த மெட்டாஸ்டேபிள் பீட்டா டைட்டானியம் கலவை பாகத்தை உள்நாட்டில் உருவாக்கியதற்காக டிஆர்டிஓ மற்றும் தொழில் துறையினரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in