

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங் கப்படும் அன்னதானத்துக்காக விஜயவாடாவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 8 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினார்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளை யும் அன்னதானம் வழங்கப்படு கிறது. கோயில் வருமானத்தில் இருந்து இதற்கான செலவுகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அன்னதான திட்டத்துக்காக தங்களால் இயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த காந்தாராவ் எனும் பக்தர் 8 டன் காய்கறிகளை அன்னதான திட்டத்துக்காக நேற்று வழங்கி னார். இந்த காய்கறி வாகனத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொடியசைத்து அனுப்பி வைத் தார். மேலும் இதே போன்று ஏராள மான பக்தர்கள் அன்னதானத்துக் காக நன்கொடைகள் வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.