துப்புரவு பணியிலிருந்து நிர்வாக பணிக்கு தேர்வான பெண்

ஆஷா கேந்தாரா
ஆஷா கேந்தாரா
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ஆஷா கேந்தாரா (40). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் 8 ஆண்டு

களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அன்றாட செலவுகளுக்கே மிகவும் சிரமப்பட்டார். எனினும், மனம் தளராத ஆஷா, தான் பாதியிலேயே கைவிட்ட கல்லூரிப் படிப்பை முடித்தார். இதற்கு பெற்றோர் உறுதுணையாக இருந்தனர்.

பின்னர், அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்த தொடங்கினார் ஆஷா.நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் மேலாக படித்து வந்தார்.இதையடுத்து, கடந்த 2019-ல்நடைபெற்ற முதல்நிலை அரசுப் பணியாளர் தேர்வில் அவர் கலந்து கொண்டார். ஆனால், கரோனா காரணமாக தேர்வு முடிவு தள்ளிப்போனது.

நாட்கள் செல்ல செல்ல, குடும்பம் நடத்துவதற்கு ஆஷாவிடம் பணம் இல்லாத சூழல் உருவானது. அப்போது தான், ஜோத்பூர் நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள் என்றசெய்தி அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்தப் பணிக்கு விண்ணப்பித்து வேலையில் சேர்ந்தார். இந்நிலையில், 2 ஆண்டுக்கு பிறகுகடந்த வாரம் அரசுப் பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் ஆஷா தேர்ச்சி பெற்றார். அவருக்கு ஜோத்பூர் நகராட்சி நிர்வாகத்தில் உயர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in