

உத்தர பிரதேசத்தின் 6 பகுதிகளில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஆக்சிஜன் ஆலை களை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்தார். அந்த மாநிலத்தின் ராம்பூரில் நடைபெற்ற தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
கடந்த 2020-ல் கரோனா முதல் அலை ஏற்பட்ட போது போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆனால் ஓராண்டுக்குள் கரோனாவை எதிர்கொள்ள தேவையான கட்டமைப்பு வசதி கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக வென்டிலேட்டர்கள், மருந்துகள், பாதுகாப்பு கவச உடைகள், என்-95 முகக்கவசம், ஆய்வகங்கள், அவசர சிகிச்சை படுக்கைகள், ஆக்சிஜன் ஆலைகள் என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டன.
கரோனா தொற்றை கண்டறிய நாடு முழுவதும் 2,624 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. பி.எம்.கேர்ஸ் நிதியில் நாடு முழுவதும் புதிதாக 1,500 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும் போது கரோனாவுக்கு எதிராக இந்தியா தீவிரமாக போரிட்டு வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் தீவிர நடவடிக்கைகளே கார ணம். அவரது முயற்சிகளால் கரோனாவில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.