

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் மேசனா மாவட்டத்தில் உள்ளது சூரஜ் கிராமம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் கிராம நிர்வாகம் தடை விதித்தது. மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அதேநேரம், வீட்டுக்குள் பெற்றோரின் செல்போன்களை அவர்களது முன்னிலையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவிகள் செல்போன் பயன்படுத்தலாம் என்று அந்த கிராம சபை தலைவர் தேவ்ஷி வங்கர் கூறினார்.