

புதிய வேளாண் சங்கங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடவும் தயாராக இல்லை.
இந்நிலையில், டெல்லியில் விவசாய சங்கங்கள் இணைந்து நேற்றுமுன்தினம் ஆலோசனையில் ஈடுபட்டன. பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடக்கும் போது, வெளியே வரும் 22-ம் தேதி திட்டமிட்டபடி எங்கள் போராட்டம் நடைபெறும். மிகவும் அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் போராட்டத்தால் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தார்.