

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தவிர்க்க வேண்டிய வார்த்தை களை உள்ளடக்கிய புத்தகம், எம்எல்ஏக்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவியில் இருக்கிறார்.
இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இதுவாகும். எனவே, இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கார சாரமான வாக்குவாதம் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சமயங்களில், சட்டப்பேரவையில் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்கள் நடை பெறுவது வழக்கம். பின்னர், அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விடும்.
இந்த முறை, இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சட்டப்பேரவையில் தவிர்க்க வேண்டிய வார்த்தை களை உள்ளடக்கிய ஒரு சிறிய புத்தகம் தயார் செய்யப் பட்டுள்ளது. சுமார் 300 வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. விரைவில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இந்த புத்தகங்கள் விநியோகிக்கப் படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநாகரிக வார்த்தைகளை தவிர்த்து சட்டப்பேரவையின் மாண்பை பேணவே இந்த முயற்சி என மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் கிரிஷ் கவுதம் தெரி வித்தார்.