பழங்குடிப் பெண்ணை நிர்வாணமாக்கிய கிராமத்தினர்: கணவரையும் தோளில் சுமக்க வைத்த கொடூரம்

பழங்குடிப் பெண்ணை நிர்வாணமாக்கிய கிராமத்தினர்: கணவரையும் தோளில் சுமக்க வைத்த கொடூரம்
Updated on
1 min read

குஜராத்தில் 23 வயது பழங்குடிப் பெண்ணை அவரது கிராமத்தினர் நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். அப்போது, பலவந்தமாக தன் கணவரையும் தோளில் சுமக்க வைத்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது.

குஜராத்தின் தாஹோத் மாவட்டம் தன்பூர் தாலுகாவிலுள்ளது கஜூரி கிராமம். இங்கு வாழும் மணமானப் பழங்குடிப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதற்காக அப்பெண்ணை கடந்த அன்று கிராமவாசிகள் சுற்றி வளைத்தனர். பிறகு அவரது உடைகளை களைந்து நிர்வாணமாக்கி நடக்க வைத்துள்ளனர்.

இத்துடன் அவரது கணவரையும் பலவந்தமாகத் தோளில் சுமந்தபடியும் நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் அக்கிராமத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்பாகவும் நடந்தேறி உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாகத் துவங்கியது. இதன் மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த குஜராத் மகளிர் ஆணையம் அதன் மாநில காவல்துறைக்கும் நோட்டீஸ் அளித்திருந்தது.

இதையடுத்து, பல்வேறு வழக்குகளை பதிவு செய்த குஜராத் போலீஸார் கஜுரி கிராமத்தில் அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தது. வீடியோவில் பதிவான முகங்களையும் ஆராய்ந்து அவர்களையும் தேடி வருகிறது.

அதேசமயம் அப் பழங்குடிப் பெண்ணிற்கு போலீஸார் பாதுகாப்பையும் அளித்துள்ளனர். இவர் மீதான வீடியோவில் அப்பெண்ணிற்கு உடை அணிவித்து பாதுகாக்க வந்த சில பெண்களையும் கிராமத்தினர் அடித்து விரட்டியதும் பதிவாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in