கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்வு:   28 பேருக்கு தொற்று

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்வு:   28 பேருக்கு தொற்று
Updated on
1 min read

கேரளாவில் தொடர்ந்து ஜிகா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான கர்ப்பிணி பெண்ணுக்கு காய்ச்சல், தலைவலி, தோலில் தடிப்புகள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்குரியவர்களின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வக நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அங்கு மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். கேரள மாநிலத்தில் ஏற்கெனவே மொத்தம் 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் அனயராவில் இருவருக்கும், குன்னுகுழுியில் ஒருவருக்கும், பட்டத்தில் ஒருவருக்கும் கிழக்கே கோட்டையில் ஒருவருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in