Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வரும் நிலையில் தனியார் மையங்களில் தடுப்பூசி நிர்வாகத்தை மாநிலங்கள் ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு

தனியார் மையங்களில் கரோனா தடுப்பூசி கொள்முதல் மற்றும் நிர்வாகம் குறித்து தினசரி ஆய்வை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் உயர்நிலைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தடுப்பூசித் திட்டத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா ஆகிய தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் சமீபத்திய அறிவிப்புகள், இந்த மாநிலங்களில் உள்ள தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி கொள்முதலின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கை யில் கோவின் தளத்தை பின்நிலை மேலாண்மை சாதனமாக பயன்படுத்துமாறு மாநிலங்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஒருங்கிணைக்குமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

மேலும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருவதை சுட்டிக்காட்டி, தனியார் மையங்களில் தடுப்பூசி யின் கொள்முதல் மற்றும் நிர்வாகம் குறித்து தினசரி ஆய்வைமேற்கொள்ளுமாறு மாநிலங் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தனியார் மையங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இடையே ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதனைத் தடுப்பதற்குவிரைவான மற்றும் ஆக்கப்பூர்வ மான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன. மக்களிடம் உள்ள தயக்கத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x