

தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) மாநிலங்களவைத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ-வின் மாநிலங்களவைத் தலைவராக, மத்திய அமைச்சராக இருந்த தாவர் சந்த் கெலாட் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மூத்த அமைச்சர்கள் சிலர் பதவி விலகியபோது, கெலாட்டும் பதவி விலகினார். இதையடுத்து அவர் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது பதவிக்கு அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயல் தற்போது என்டிஏ-வின் மாநிலங்களவை துணைத் தலைவராக உள்ளார். மேலும் கடந்த 2010 முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மத்திய அரசில் வர்த்தகம், தொழில், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராக பியூஷ் கோயல் உள்ளார்.